பாரம்பரிய தற்காப்புக் கலைகளில், தமிழகம் சிறந்தது. சிலம்பம், மல்யுத்தம், களரி, வாள், கேடயம் போன்ற கலைகள், பழங்கால வழக்கத்தில் இருந்தன.இக்கலைகள், தற்கால வாழ்க்கை முறையில், படிப்படியாக வழக்கொழிந்து வருகின்றன. இவற்றை, இக்கால தலைமுறையினரும் அறிய, ஆர்வலர்கள், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களை பயிற்சியில் ஈடுபடுத்துகின்றனர்.செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், இளைஞர், சிறுவர்கள், சிலம்பம் உள்ளிட்ட கலைகளை அறிய விரும்பி, ஆர்வத்துடன் பயிற்சி பெறுகின்றனர்.இவர்கள், கோவில் உற்சவம் உள்ளிட்ட விழாக்களில், இத்தகைய கலைகள் நிகழ்த்தி, சாகசம் செய்கின்றனர்.