பதிவு செய்த நாள்
09
பிப்
2021
05:02
புதுச்சேரி; முத்தியால்பேட்டை பொன்னுமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ஷேகம் நடந்தது.முத்தியால்பேட்டை கணேஷ் நகர், நகராட்சி சலவை துறையில் உள்ள பொன்னு முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன் தினம் மாலை 4 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜைகள், கரிகோலம் நடந்தது.நேற்று காலைகோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. காலை 9:30 மணிக்கு மேல் பொன்னு முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், சுவாமிகளுக்கு கும்பாபி ஷேகமும், மகா அபிஷேகம் நடந்தது. லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்றனர்.