லலிதாம்பிகை கோவிலில் வரும் 11ம் தேதி அமாவாசை தேர் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2021 05:02
புதுச்சேரி; குருமாம்பேட் யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், வரும் 11ம் தேதி அமாவாசை தேர் உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி குருமாம்பட்டு, ஹவுசிங்போர்டு, இந்திரா நகரில் உள்ள யோகமாயா லலிதாம்பிகை ஆலயத்தில், வரும் 11ம் தேதி, அமாவாசை தினத்தையொட்டி, இரவு 7 மணிக்கு, அம்பிகை தேரில் அமர்ந்து மங்கள வாத்தியங்களுடன் வலம் வரும் ரத உற்சவம் நடக்கிறது.இதுபோல், ஒவ்வொரு அமாவாசை தினத்திலும், இரவு 7 மணிக்கு தேர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை யோகி லலிதா மகாமேரு டிரஸ்ட் செய்து வருகிறது.