பதிவு செய்த நாள்
10
பிப்
2021
04:02
பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஜோதிலிங்கேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பூஜைகள் நடைபெற்றன.ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ராமலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.
மாகாளியம்மன் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ரலிங்கேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ருத்ரலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோவிலில் நடந்த வழிபாட்டில், சிறப்பு அலங்காரத்தில் யோக நரசிம்மர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி, சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.உடுமலைஉடுமலை தில்லை நகர், ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு, 16 வகையான பொருட்களில், அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், ரத்தினலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். பிரசன்ன விநாயகர் கோவிலில், விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் சன்னதியில், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, ரிஷப வாகனத்தில், விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர், சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் உட்பட கோவில்களிலும், சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று தை மாத இரண்டாவது பிரதோஷபூஜை நடந்தது. பூஜையில்,மாலை, 5:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. மாலை, 6:10 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. அதன்பின், ரிஷப வாகனத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.