மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2021 10:02
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.
இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு 7 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் பிரகாரத்தில் ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. கோவில் பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். இரவு 7.45 மணிக்கு மகா தீபாராதனையுடன் உற்சவம் நிறைவடைந்தது. இதில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில் குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம், மேலாளர் மணி மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக 11 வது மாதமாக நேற்றும் பக்தர்களுக்கு அனுமதியின்றி உற்சவம் நடந்தது. கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நேற்று பக்தர்கள் மூலவர் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.