விழுப்புரம் : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, விழுப்புரத்தில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேஷத்ர டிரஸ்டி நிர்வாகிகள், பொதுமக்களிடம் நிதி திரட்டினர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியில், பொதுமக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேஷத்ர டிரஸ்டியினர், பொதுமக்களிடம் நிதி திரட்டி வருகின்றனர்.அதன்படி, விழுப்புரம் கோவிந்தராஜ பெருமாள் வீதியில், பா.ஜ., மாவட்ட பொருளாளர் சுகுமார் தலைமையில் நிர்வாகிகள் சண்முகம், ஸ்ரீராம், அண்ணாமலை ஆகியோர் நேற்று பொதுமக்களிடம் ரசீது வழங்கி நிதி திரட்டினர்.