பதிவு செய்த நாள்
23
பிப்
2021
04:02
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், கயிலாய வாத்தியங்கள் முழங்க விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு, சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, காலை 10:00 மணிக்கு மேல், நுாற்றுக்கால் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ மூர்த்திகளும், எதிரே உள்ள வசந்த மண்டபத்தில் விபசித்து முனிவரும் எழுந்தருளினர். பிற்பகல் 12:00 மணிக்கு மேல், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் உட்பிகார வலம் வந்தன. 1:30 மணியளவில், கயிலாய வாத்தியங்கள் முழங்க, மலர்கள் துாவ, விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.