பதிவு செய்த நாள்
23
பிப்
2021
02:02
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுமான பணியை, தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் அஜிஸ் நகர் ரவுண்டா அருகில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவில் கட்டுவதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான குமரகுரு எம்.எல்.ஏ., தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை தேவஸ்தான நிர்வாகத்திற்கு தானமாக வழங்கினார். இதனையடுத்து, கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை மற்றும் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.அதனையொட்டி நேற்று அதிகாலை கோ பூஜையுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, காலை 10:00 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கு நடைபெற்ற யாகசாலை பூஜையில் பங்கேற்றார்.நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் சண்முகம், சம்பத், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேவஸ்தான அறங்காவல் குழு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ., வரவேற்றார்.விழாவில், கலெக்டர் கிரண்குராலா, முன்னாள் அமைச்சர் மோகன், பிரபு எம்.எல்.ஏ., ஸ்ரீ சாரதா ஆஸ்ரம தலைமை மாதாஜி எத்தீஸ்வரி ராமகிருஷ்ணா ப்ரியா அம்பா, ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆஸ்ரம தலைவர் அனந்தானந்தஜி மஹராஜ், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ராஜசேகர் மற்றும் தேவஸ்தான குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஸ்ரீநிவாச பெ