பதிவு செய்த நாள்
23
பிப்
2021
04:02
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தேவணாம்பாளையம் மாரியம்மன் கோவிலில், 25ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.கிணத்துக்கடவு, தேவணாம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷே விழாவில், இன்று (23ம் தேதி) காலை, 8:00 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக அழைத்து வருதல், மாலை, 4:30 மணிக்கு முதல்கால வேள்வி பூஜை நடக்கிறது.நாளை, 24ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலை மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. 25ம் தேதி, காலை, 7:30 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜையை தொடர்ந்து, 10:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு தீர்த்த குடங்களில் உள்ள புனித நீரை ஊற்றி, கோவை ஸ்ரீ தர்மராஜா அருட்பீடம் ஸ்ரீலஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடக்கிறது.இதனை தொடர்ந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.