பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி உற்சவத்தையொட்டி உள்ள சங்கீத உற்சவம் கொரோனா கொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் நடந்தன.
செம்பை பார்த்தசாரதி கோவிலில் எல்லா ஆண்டும் மாசி மாதம் ஏகாதசி உற்சவம் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு 107-வது ஏகாதசி உற்சவத்தின் கொடியேற்றம் கடந்த பிப். 19ம் தேதி மாலை கோவில் சந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரியில் தலைமையில் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நாளான இன்று காலை 8.30 மணி தியாகராஜ பாகவதரின் யாசிப்பை நினைவூட்டும் வகையில் உஞ்சவிருத்தி நிகழ்வு நடந்தன. இதையடுத்து இசைக் கலைஞர் மன்னூர் ராஜகுமாரன் உண்ணி, சுகுமாரி நரேந்திர மேனன், குழல்மன்னம் ராதாகிருஷ்ணன், சுசீலா ஆகியோரின் தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடுதல் நடைபெற்றனர். தொடர்ந்து 11 மணியவில் செம்பை வைத்தியநாத பாகவதரின் சீடரும் பிரபல இசைக் கலைஞருமான யேசுதாஸ், அமேரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக சங்கீதாராதனை நடத்தினர். இவருக்கு வயலினில் மகாதேவா சார்மாவும் மிருதங்கத்தில் ஹரியும் கடத்தில் ராதாகிருஷ்ணனும் தம்புராவில் பரவூர் ராதாகிருஷ்ணனும் பக்கவாத்தியம் வாசித்தனர். எல்லா ஆண்டும் குரு சன்னிதியில் நேரில் வந்து சங்கீதா ஆராதனை நடத்தியிருந்த யேசுதாசஸ் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக காணொளி வாயிலாக சங்கீத ஆராதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நாளை நடக்கும் ஆறாட்டு நிகழச்சியுடன் ஐந்து நாள் உற்சவம் நிறைவடைகின்றன. செம்பை வைத்தியநாத பாகவதரால் துவக்கிவைத்த இந்த உற்சவத்தின் ஏற்பாடுகளை செம்பை சீனிவாசன், செம்பை சுரேஷ் ஆகியோர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் செய்துள்ளனர்.