பதிவு செய்த நாள்
24
பிப்
2021
11:02
வண்ணாரப்பேட்டை : வண்ணாரப்பேட்டை, காமாட்சி அம்மன் கோவிலில், 17ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, திருத்தேர் வீதி உலா நடந்தது.
வண்ணாரப்பேட்டை, காமாட்சி அம்மன் கோவிலில், 17ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் நேற்று காலை, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், அம்மன் வீதி உலா நடந்தது.சஞ்சீவிராயன் கோவில் தெரு, பாலு தெரு, தண்டவராயன் கோவில் தெரு, கப்பல் போலு தெரு, ஜி.ஏ.,ரோடு வழியாக வந்து, கோவிலை அடைந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இன்று மாலை, திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதில், திரளான பெண்கள் பங்கேற்க உள்ளனர்.தினமும் காலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை, 6:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.