காரைக்கால் : காரைக்கால் நித்ய கல்யாணபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
காரைக்கால் பாரதியார் சாலை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.நேற்று முன்தினம் மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. மாலை, நித்ய கல்யாண பெருமாள், ரங்கநாயகி தாயாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று பெருமாள் வெண்ணெய்த் தாழி சேவையுடன் வீதியுலா நடந்தது. அறங்காவல் தலைவர் கேசவன், செயலாளர் பக்கிரிசாமி, துணைத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன், உறுப்பினர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.