ராமேஸ்வரம் தீவு பகுதியில் தீர்த்தங்களுக்கு விஜயேந்திரர் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2021 10:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு பகுதியில் பசுமை அமைப்பினர் புதுப்பித்த தீர்த்த கிணறு, குளத்தின் புனித நீருக்கு காஞ்சி மடம் பீடாதிபதி விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார்.
ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்கள் தவிர ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடத்தில் 60க்கு மேலான தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட முடியாமல் மூடி கிடந்தன. இவ்வாறு இருந்த 36 தீர்த்தங்களை விவேகானந்தா கேந்திரம், பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் கண்டறிந்து புதுப்பித்து பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்தனர். கலசங்களில் வைக்கப்பட்டிருந்த 36 தீர்த்தங்களின் புனித நீருக்கு விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜை செய்து ஆசி வழங்கினார். இதில் பசுமை ராமேஸ்வரம் அமைப்பின் செயலர் வாசுதேவ், நிர்வாகிகள் ஸ்ரீதர், யோகா கலை நிபுணர் ஹெக்டே உட்பட பலர் பங்கேற்றனர்.