பதிவு செய்த நாள்
01
மார்
2021
12:03
திருப்பதி: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் அருகே, ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு, சிறிய இடம் ஒதுக்குமாறு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடக்கிறது. கட்டுமானப் பணியை, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இதற்காக, நாடு முழுதும், மக்களிடம் நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது.கடிதம்இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் அருகே, ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை தலைவர், ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் அருகே, வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுவதற்காக, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் நிலம் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்து, கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானம்: ராமர் கோவில் அருகே, பிரார்த்தனை மண்டபம் கட்டவும் விருப்பம் தெரிவிக்க உள்ளோம். இது தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவும், கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.