பதிவு செய்த நாள்
02
மார்
2021
09:03
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மகாமுனிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 24ம் தேதி நள்ளிரவு ஆழியாறு ஆற்றுப்படுகையில் மயான பூஜை நடந்தது. தொடர்ந்து, 25ம் தேதி காலை சக்தி கும்பஸ்தாபனம் மற்றும், 27ம் தேதி காலை, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு மகாமுனிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அலங்காரம் செய்யப்பட்ட மகாமுனி, மாசாணியம்மன் சன்னிதானத்துக்கு முன், பெரிய மீசையுடன் கம்பீரமாக காட்சியளித்தார்.பக்தர்கள் மனமுருகி மகாமுனியை வழிபட்டு, பிரசாதம் பெற்றுச்சென்றனர். நேற்று காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.