ஒருவன் தன் மார்பின் மீது நெருப்பை எடுத்து வைத்தால், சட்டை தீய்ந்து போகாமல் இருக்குமா? யாராவது ஒருவன் நெருப்பின் மீது நடந்தால், அவன் பாதம் நோகாமல் இருக்குமா? இதெல்லாம் எப்படி உண்மையோ, அதுபோல் தான் மாற்றான் மனைவியை அடைய நினைப்பவன் நிலையும் அமையும். அவன் நிச்சயம் சூடுபட்டே தீருவான். பிறன் மனைவியோடு தொடர்பு கொள்பவன் பெண்மையை மதிக்காதவன். மனித உணர்வு இல்லாத அரக்கனுக்கு சமம். அவ்வாறு செய்பவன் தன் ஆத்மாவையே அழித்துக் கொள்கிறான். அவனுக்கு புண்ணும், அவமானமும் ஏற்படும். அவன் செய்த அக்குற்றம் என்றும் துடைத்தெறியப்படாமல் அப்படியே இருக்கும்.