மேலும் பகலும் விண்ணுரு வேத்தி நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை கங்கை யீசன் கருதிய நீர்புரை செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன் முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல் ஆகாச வட்டத்து அமர்ந்த சதாசிவன் பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை
தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர் பாகமாய் ரதமும் பகல்வழி யாரை சாகா வகையும் தன்னை அறிந்து ஐந்து ஜீவனுடன் ஐயஞ் சுகல்பமும் விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி சந்திர சூரியர் தம்முடன் அக்கினி அந்தி ரனைக்கண்டு அறிந்தே யிடமாய்ச்
சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை மந்திர அர்ச்சனை வாசிவ என்று தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில் ஆறு முகமாய் அகத்துளே நின்று வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு வாலைக் குழந்தை வடிவையும் காட்டி நரைதிரை மாற்றி நாலையும் காட்டி உரைசிவ யோகம் உபதேசம் செப்பி
மனத்தில் பிரியா வங்கண மாக நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து அதிசயம் என்றுன் அடியார்க்கு இரங்கி மதியருள் வேலும் மயிலுடன் வந்து நானே நீயெனும் லட்சணத் துடனே தேனே என்னுளம் சிவகிரி எனவே ஆறா தாரத்து ஆறு முகமும் மாறா திருக்கும் வடிவையும் காட்டிக் கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க தனதென வந்து தயவுடன் இரங்கிச்
சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம் எங்கு நினைத்தாலும் என்முன்னேவந்து அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத் தட்டாத வாக்கு சர்வா பரணமும் இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத் துலக்கிய காவியம் சொற்பிர பந்தம் எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம் வழுத்தும் என்நாவில் வந்தினி திருந்தே அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும் சமுசார சாரமும் தானே நிசமென
வச்சிர சரீரம் மந்திர வசீகரம் அட்சரம் யாவும் அடியேனுக் குதவி வல்லமை யோகம் வசீகர சக்தி நல்லஉன் பாதமும் நாடிய பொருளும் சகலகலை ஞானமும் தானெனக் கருளி செகதல வசீகரம் திருவருள் செய்து வந்த கலிபிணி வல்வினை மாற்றி இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக் கிட்டவே வந்து கிருபை பாலிக்க அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்