பரமக்குடி: பரமக்குடி பெரிய பஜார் சந்திப்பு முனி கோயிலில் பொங்கல் விழா நடந்தது. முனீஸ்வரருக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மாலை 5:00 மணிக்கு முனீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.