பதிவு செய்த நாள்
10
மார்
2021
10:03
திருச்சி:திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், வெயில் தாக்கத்தால் சிரமப்படுவதை தவிர்க்க, தென்னை நார் விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் 156 ஏக்கரில் அமைந்த ரெங்கநாதர் கோவிலில், 72 மீட்டர் உயரம் கொண்ட ராஜகோபுரம் உட்பட 21 கோபுரங்கள் உள்ளன. கோவில் வளாகத்தில், பெரும்பாலான இடங்களில், பலகை கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.கோடை காலத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள், வெயில் உக்கிரத்தால் இதில் நடக்க முடியாமல் சிரமப்படுவர். தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சூடு தாங்காமல் நடக்க சிரமப்படுவதை தவிர்க்க, தென்னை நார் விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உபயதாரர்களின் உதவியுடன், வெயிலால் அதிகம் சூடு ஏறாத தென்னை நாரினால் தயாரிக்கப்பட்ட தரை விரிப்புகளை, கோவில் வளாகம் முழுவதும் விரித்து, பக்தர்கள் சிரமம் இன்றி நடக்க ஏற்பாடு செய்துள்ளார். இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, கண்காணிப்பாளர் வேல்முருகன், அறங்காவலர் சீனிவாசன் மற்றும் கோவில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோருடன்,விரிப்புகளை ஆய்வு செய்தார்.