துாத்துக்குடி: ஈரோட்டைச்சேர்ந்த தினேஷ் கிருஷ்ணன் குடும்பத்தினர் நேற்று திருச்செந்துார் மூலவருக்கு அணிவிப்பதற்காக ரூ.55 லட்சம் மதிப்புள்ள 1350 கிராம் எடை கொண்ட தங்ககிரீடத்தை வழங்கினர். கோயில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன் பெற்றுக்கொண்டார். தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், உள்துறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, நகை மதிப்பீட்டு குழுவினர் உடனிருந்தனர்.