மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2021 10:03
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசிமகா சிவராத்திரி திருவிழா நாளை (மார்ச் 11ல்) துவங்குகிறது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., துாரம் மஞ்சளாற்றின் நதிக்கரையோரம் மூங்கிலணை காமாட்சியம்மன்கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. அடைக்கப்பட்ட குச்சு வீட்டின் அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. மஞ்சளாற்றில் குளித்துவிட்டு சுந்தரவிநாயகரை தரிசித்துவிட்டு காமாட்சியம்மனை பக்தர்கள் வணங்குகின்றனர்.
மாலை 6:00 மணிக்கு உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடக்கும் சாயரட்சை லட்சதீபம் பூஜையில் பல்வேறு காரியங்களுக்கு உத்தரவு கேட்பது வழக்கம்.மாசிமகா சிவராத்திரி திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். இதற்காக பிப்.19ல் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. நாளை இத்திருவிழா துவங்கி மார்ச் 18 வரை 8 நாட்கள் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சந்திரசேகரன், பரம்பரை அறங்காவலர்கள் தனராஜ் பாண்டியன் மற்றும் கனகராஜ் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.