திருவள்ளூர் : திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து சப்பரத்தில் உற்சவர் வீதி உலா வந்தார். இரவு, சிம்ம வாகனம் நடந்தது. நேற்று கொடியேற்றத்துடன் துவங்கிய விழா, இம்மாதம், 19ம் தேதி நிறைவு பெறுகிறது. விழா காலங்களில் காலை, மாலை வேத பாராயணம் நடைபெறும்.