பரமக்குடி ராமகிருஷ்ண பஜனை மடம் - மார்ச் 15 ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2021 02:03
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள, ராமகிருஷ்ண பஜனை மடத்தில் கும்பாபிஷேக விழா மார்ச் 15 ல் நடக்கிறது. இதன்படி மார்ச் 14 மாலை 6:00 மணிக்கு அனுக்கை, விநாயகர் பூஜையுடன் விழா துவங்குகிறது. இரவு முதல் கால யாக பூஜையும், மறுநாள் காலை இரண்டாம் கால யாக பூஜைகள் நிறைவடைந்து, 7:00 மணிக்கு மஹா பூர்ணாகுதி நடக்கும். தொடர்ந்து காலை 9:45 மணிக்கு மேல், பஜனை மடத்தில் அருள்பாலிக்கும், ராதாகிருஷ்ணருக்கு மகா கும்பாபிஷேகமும், காலை 11:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் மற்றும் கும்பாபிஷேக ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் செய்து வருகின்றனர்.