பதிவு செய்த நாள்
10
மார்
2021
02:03
அன்னூர்: கஞ்சப்பள்ளி, அங்காளபரமேஸ்வரி கோவில் குண்டம் திருவிழா இன்று துவங்குகிறது. கஞ்சப்பள்ளியில் பழமையான அங்காள பரமேஸ்வரி கோவிலில், 16ம் ஆண்டு குண்டம் திருவிழா இன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இதையடுத்து, கொடியேற்றம், காப்புக் கட்டுதல், பரிவார தேவதைகள் மற்றும் முன்னோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தல் நடக்கிறது. 11ம் தேதி காலையில் குண்டம் கண் திறப்பது, மாலையில், கன்னிமார் பூஜையும், சுமங்கலி பூஜையும், இரவு அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அக்னி குண்டம் ஏற்றுதலும் நடக்கிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு, மயான பூஜை நடக்கிறது. 12ம் தேதி காலை 5:30 மணிக்கு, கரகம் எடுத்து வருதலும், அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்குதலும் நடக்கிறது, மதியம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, மேளதாள வாத்தியம் முழங்க, விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாடு செய்வோர் செய்து வருகின்றனர்.