வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் 138 ம் ஆண்டு மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு வீரக் குமாரசாமி தேர் திருவிழா நாளை துவங்க உள்ளது.
மார்ச் 11 ம் தேதி வியாழன் மதியம் 3 மணி அளவில் பள்ளய பூஜை நடக்கிறது. மாலை 4.30 மணி அளவில் அவிட்ட நட்சத்திரத்தில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளச் செய்தல், மாலை 5.30 மணி அளவில் திருத்தேர் நிலை பெயர்த்தலைத் தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 12 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் தேரோட்டத்தைத் தொடர்ந்து திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுவாமி தேர்க் கால் பவனியைத் தொடர்ந்து தேவஸ்தான மண்டபக் கட்டளை நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர்த் திருவிழா வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் தீர்த்தக் காவடி மற்றும் அபிஷேகத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் வளாகத்தில் கடைகள் அமைக்க கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. மார்ச் 11 ம் தேதி மஹா சிவன்ராத்திரி இரவு முழுவதும் திருக்கோவில் நடை திறந்திருக்கும் மற்ற திருவிழா நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். தேர் வடம் பிடிப்பவர்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்பவர்கள் அவசியம் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். என அறிவுறுத்தப்பட்டுள்ளது.