பதிவு செய்த நாள்
10
மார்
2021
02:03
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் வரும், 12ல் மயான சூறை திருவிழா நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோவில் மயான சூறை திருவிழா வரும், 10ல் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. ?தொடர்ந்து, 11ல் இரவு, 10:00 மணிக்கு மஹா சிவராத்திரியும், 12ல் காலை அலகு போடுதலும், மாலை, 3:50 மணிக்கு அம்மன் மயான சூறைக்கு புறப்படுதலும் நடக்கிறது. அக்னி குண்ட பூமிதி விழா, 14 காலை, 9:00 மணிக்கும், இரவு, 7:00 மணிக்கு அம்மன் பல்லக்கு ஊர்வலமும் நடக்கிறது. அம்மையப்பன் திருக்கல்யாணம், 15ல் காலை, 11:00 மணிக்கும், 16ல் காலை மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை அம்மையப்பன் நகர்வலமும் நடக்கிறது. தொடர்ந்து, 17ல் இரவு, 10:00 மணிக்கு கும்ப பூஜையும், 19ல் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. இதே நாட்களில், காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவிலுள்ள அங்காளம்மன் கோவிலிலும் மயான சூறைத்திருவிழா நடக்கிறது. இதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவில் மயானசூறை திருவிழா வரும், 11ல் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. ?தொடர்ந்து, 12ல் மஹா சிவராத்திரியும், 13ல் அலகு குத்தும் நிகழ்ச்சியும், அம்மன் மயான சூறை புறப்படுதலும், 15ல் மாலை, 6:00 மணிக்கு அக்னி குண்ட தீமிதி விழாவும், 16 காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், மாலை, 5:00 மணிக்கு அம்மன் நகர் வலமும் நடக்கிறது. ?மேலும், 17ல் இரவு, 8:00 மணிக்கு கும்பபூஜை மற்றும் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பருவதராஜ குல மீனவர் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.