இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2021 05:03
மதுரை: இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேதகு ராணி சாஹிபா மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் மாசி சிவராத்திரியை முன்னிட்டு, இன்று 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் கணபதி ராமன், ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் பலர் செய்திருந்தனர்.