பதிவு செய்த நாள்
13
மார்
2021
11:03
ஸ்ரீவில்லிபுத்துார் : மஹா சிவராத்திரி வழிபாட்டில், கொதிக்கும் நெய்யில், 88 வயதான மூதாட்டி, கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் பத்திரகாளியம்மன் கோவிலில், மஹா சிவராத்திரியான நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, கொதிக்கும் நெய்யில், கையால் அப்பம் சுடும் வழிபாடு துவங்கியது. மூதாட்டியான முத்தம்மாள், 88, அம்மனை வணங்கி, விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு வெல்லம், அரிசி மாவு கலந்த அப்ப உருண்டையை மிதக்க விட்டு, கரண்டி பயன்படுத்தாமல், கையால் எடுத்து, பனை ஓலை பெட்டியில் சேகரித்தார்; பூஜாரிகள் உடனிருந்தனர். நேற்று அதிகாலையில், அம்மனுக்கு அப்பங்கள் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்பம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மதுரை, தேனி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசித்தனர்.