பதிவு செய்த நாள்
13
மார்
2021
11:03
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ விருத்தபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை யொட்டி ஐந்து கால பூஜை நடந்தது.
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீராம் நகர் உள்ளது. இங்கு உள்ள விருத்தபுரீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியையொட்டி, நேற்றுமுன்தினம் முதல் மாலை, 6:00 மணி, இரவு, 10:00 மணி, 2:00 மணி, அதிகாலை 4:00 மணி, காலை, 6:00 ஆகிய நேரங்களில், விருத்தபுரீஸ்வரருக்கு சந்தனம், விபூதி, பணம், பழங்கள், வில்வ இலை அலங்காரங்கள் நடந்தன. விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், அம்மன் அலங்காரம், அபிஷேக வழிபாடுகள் நடந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாக குழு செய்து இருந்தது.