திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2021 11:03
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு முதலாம் கால பூஜை துவங்கியது. பின்னர் இரவு 10:30 மணிக்கு திருநாகேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர் சன்னதி மற்றும் சுற்றிலும் பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடினர். பின்னர் இரவு 11:30 மணிக்கு 3ம் கால பூஜை நடந்து தீபாரதனை நடந்தது. சுகந்த அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அகத்திஸ்வரருக்கு வில்வ இலைகளால் அர்ச்சனையும் பாஸ்கர குருக்கள் நடத்தினார். அடுத்து அதிகாலை 2.30 மற்றும் 4.30 மணிக்கு 3/4 ம் கால பூஜைகள் ரமேஷ் குருக்கள் செய்தார். திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சிவனடியார்களுக்கு திருவமுது வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை தேவஸ்தான , பிரதோச குழுவினர் செய்தனர்.
தி.புதுப்பட்டி அகத்தீஸ்வரர் கோயிலில் மார்ச் 2ல் காப்புக்கட்டி சிவராத்திரி விழா துவங்கியது. சிவராத்திரியன்று மாலை பக்தர்கள் பால்குடம் எடுத்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் விக்னேஸ்வர பூஜை நடந்து சிவராத்திரி ஹோமம் துவங்கியது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. சுவாமி திருவீதி புறப்பாடு நடந்தது. இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடந்தது. ஏற்பாட்டினை விழா குழு கிராமத்தினர் செய்தனர்.