பதிவு செய்த நாள்
13
மார்
2021
12:03
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே உருமாண்டாம்பாளையத்தில் பார்வதி, பரமசிவன் உருவம் செய்து, சிவராத்திரி விழா கொண்டாட்டம் நடந்தது.
இக்கோவிலில் பிரதி மாதம் அமாவாசை, பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மகாசிவராத்திரி விழாவையொட்டி, பரமசிவன், பார்வதி அம்மன் உருவம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி, சிறுவர்களின் ஜமாப் நிகழ்ச்சி, விநாயகர் மற்றும் பண்ணாரி அம்மனுக்கு சுற்றுப் பூஜைகள், பார்வதி, பரமசிவனுக்கு மலர்கள் தூவி, மாலைகள் அணிவிக்கப்பட்டு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழ வகைகள், தேங்காய் ஆகியவற்றுடன், முதல் கால பூஜை நடந்தது. இதில், இறைவனுக்கு அபிஷேகம், கிச்சடி, கேசரி ஆகியவை படைக்கப்பட்டன. இதேபோல இரண்டாம் கால, மூன்றாம் கால, நான்காம் கால பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில், உருமாண்டம்பாளையம், வெள்ளக்கிணறு, நஞ்சை கவுண்டன் புதூர், ஜி. என். மில்ஸ் வி.சி.எஸ்., நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. சிவராத்திரி விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. ஏற்பாடுகளை பண்ணாரி அம்மன் கோவில் பவுர்ணமி குழுவினர் செய்து இருந்தனர்.