ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் மங்காங்குளத் தெருவில் உள்ள சள்ளச்சேரி அங்காளம்மன் கோவில் தீமிதி உற்சவம் நடந்தது.கோவிலில் கடந்த 13ம் தேதி மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 18ம் தேதி மாலை தீமிதி உற்சவம் நடந்தது. முன்னதாக அக்னி கரகம் திருக்குளத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. கோவில் அருகே உள்ள அக்னி குண்டத்தில் இறங்க அதனையடுத்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது.