இந்திலி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2021 10:03
சின்னசேலம்: இந்திலி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்துவங்கியது.சின்னசேலம் அடுத்த இந்திலி கிராமத்தில் உள்ள அருள் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து, முருகனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது.தொடர்ந்து 8 நாட்களுக்கு சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் வரும் 28ம் தேதி மாலை நடக்கிறது. மறுநாள் முத்துப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.இதேபோல், சின்னசேலம் மூங்கில்பாடி சாலையில் உள்ள முருகன் கோவிலிலும் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.