மதுரை: மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது ஹயக்கிரீவர் கோயில். இங்கு வரும் 28 ம் தேதி 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் செஞ்சுலஷ்மி தாயார் சமேத கல்யாண நரசிம்மருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்: 28 ம் தேதி: காலை 8.00 மணிக்கு காசி யாத்திரை, காலை 9.00 மணிக்கு பாணி ேஹாமம், காலை 10.25 மணிக்கு திருமாங்கல்ய தாரணம், வேத விண்ணப்பம் மற்றும் திருவோராதணம் சாத்துமுறை கோஷ்டி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீநாராயண பீடம், ஸ்ரீஹயக்கீரிவர் கோயில் நிர்வாகம் செய்துள்ளனர்.