வீரபாண்டி: சேலம், ராக்கிப்பட்டி அருகே செங்கோடம்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் மலைக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர்த்திருவிழா வரும் மார்ச் 29ல் நடக்க உள்ளது. விழாவையொட்டி, தேர்களை சுத்தம் செய்து சாரங்கள் கட்டி துணி போர்த்தி அலங்கரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.