பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2021 09:03
பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் நாளை புதிய மூன்று நிலை ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
பரமக்குடி வைகை ஆற்றின் படித்துறையில் அருள்பாலிக்கும் சாத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று மாலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனித தீர்த்த குடங்களுடன் யாக சாலை பிரவேசம் செய்தனர். தொடர்ந்து முதல்கால யாக பூஜைகளும், இன்று காலை, மாலை இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கிறது. நாளை அதிகாலை 4:30 மணி முதல் நான்காம் கால யாக பூஜைகள், மஹா பூர்ணாகுதி நிறைவடைந்து 6:00 மணிக்குள் மகா அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் நடராஜன் செட்டியார் தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர்.