பதிவு செய்த நாள்
23
மார்
2021
10:03
அனுப்பர்பாளையம்: திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா நாளை 24 தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி, நாளை இரவு 8 : 00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, 10 : 00 மணிக்கு கிராம சாந்தி, 11: 00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், அஷ்டதிக் பாலகர் வழிபாடு, அம்மன் புறப்பாடு நிகழ்ச்சிகள். நடைபெறுகிறது.
நாளை மறுநாள் 25 நம் தேதி மற்றும் 26, 27 நம் தோதிகளில் தினசரி காலை 7:30 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல் இரவு 7 : 00 மணிக்கு அபிஷேகம் தீபாராதனை, அம்மன் புறப்பாடு, 28 ம் தேதி மஞ்சள் நீராடுதல், வசந்தம் பொங்கல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 30 தேதி அதிகாலை 4 : 00 மணிக்கு பூசாரிகள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 8 : 00 மணிக்கு குண்டம் மூடுதல், மதியம் 2 : 00 மணிக்கு அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் வலம் வருதல். மதியம் 3 : 30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில், பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக குடிநீர், மொபைல் டாய்லெட், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.