அடிக்கடி காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், உடல்வலி என்று ஏதாவது தொந்தரவு இருக்கிறதா! டாக்டரிடம் காட்டியும் தீரவில்லையா! இவர்கள் செய்ய வேண்டியது இதுதான்! சிவன் அல்லது முருகனை சரணடைந்து விட்டால் பிரச்னை குறைவதை உணர முடியும். சிவனை வழிபட நினைப்பவர்கள், நெற்றியில் விபூதி இட்டு, கீழேயுள்ள பாடலை 12முறை பாராயணம் செய்வது நற்பலன் தரும். மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சுந்தரேஸ்வரரை மனதில் நினைத்து பாடினால் தீர்வு கிடைக்கும். இதுதவிர, காலை, மாலை நேரங்களில் நெற்றியில் திருநீறு அணிந்து, கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்துவர ஆரோக்கியம் மேம்படும். சிவாலயங்களில் உள்ள ஜுரதேவர் சந்நிதியில், சுவாமிக்கு மிளகு அரைத்துப் பூசினாலும் சிரமம் நீங்கும்.