பதிவு செய்த நாள்
26
மார்
2021 
01:03
 
  கூடலுார்: கூடலுார், பாண்டியார் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கூடலுார், பாண்டியார் அரசு தேயிலை கோட்டம் சரகம் பகுதியில் உள்ள, மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 21ம் தேதி துவங்கியது.23ம் தேதி மாலை, 4:30 மணிக்கு ஆற்றில் இருந்து புனித நீர் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு முதல் கால பூர்ணாஹுதி தீபாராதனை; இரவு, 10:00 மணிக்கு யந்திரஸ்தாபனம், திருமேனி பிரதிஷ்டை நடந்தது. நேற்று, காலை, 6:00 மணிக்கு யாக பூஜைகளும்; காலை, 9:30 மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து, மூலவர் பரிவார கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்கார, பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.