பழநி: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில் தேரோட்டம் நடந்தது. கோயிலில் மார்ச் 22ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை தந்த பல்லக்கில் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருத்தேரில் எழுந்தருளல் நடந்தது. மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் துவங்கி நான்கு கிரிவீதிகளில் வலம் வந்தது. மாலை 5:50 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. பழநி கோயில் செயல் அலுவலர் குமரதுரை, உதவிஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், கந்தவிலாஸ் செல்வகுமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்தையர், அறங்காவலர் குழு தலைவர் அப்புகுட்டி, அறங்காவலர்கள் செல்லமுத்தையா, லதா, சேகர், கமலகண்ணன் பங்கேற்றனர். மார்ச் 31ல் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.