விருதுநகர் மாரியம்மன் பங்குனி பெங்கல் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2021 12:03
விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு நேற்று இரவு 8.01 மணிக்கு பக்தர்களின் ஆ ேஹா... அய்யா ேஹா பக்தி கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். இரவு 9:00 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்மன் எழுந்தருள வீதி உலா நடந்தது. ஏப்., 4 ல் பொங்கல், 5ல் கயிறு குத்து, அக்னி சட்டி, கரகம், 6ல் இரவு 7:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏப்., 8 ல் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார்கள் தேவஸ்தானம் செய்து வருகிறது.
திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சக்தி மாரியம்மன் கோயில் 46 வது பங்குனி பொங்கல் திருவிழா நேற்று காலை 7:35 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, இரவு 7: 00 மணிக்கு அம்மன் பல்வேறு அலங்காரத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏற்பாடுகளை திருத்தங்கல், சென்னை வாழ் இந்து நாடார் உறவின்முறை, தர்ம பண்டு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.