பதிவு செய்த நாள்
29
மார்
2021
03:03
ஊத்துக்கோட்டை : ஜாத்திரையை ஒட்டி, கிராம தேவதைகளுக்கு பொங்கல் வைத்து காப்பு கட்டப்பட்டது.
ஊத்துக்கோட்டையில், மாரியம்மனுக்கு, வரும், 31 மற்றும், ஒன்றாம் தேதி ஜாத்திரை நடைபெற உள்ளது. நேற்று காலை, ஏரிக்கரையில் உள்ள கிராம தேவதை செல்லியம்மனுக்கு, பொங்கல் வைத்தல் நிகழ்வு நடந்தது.மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பின், ஏரிக்கரையின் மீது இருந்து, கரகம் எடுத்து வந்து கோவிலில் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.மாலை, அங்காளம்மன் கோவில், எல்லையம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்து, ஜாத்திரை விழாவிற்கான காப்பு கட்டப்பட்டது. இன்று, மற்றும் நாளை, அலங்கரிக்கப்பட்ட கரகம் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வர உள்ளது.வரும், 31ம் தேதி இரவு, மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.வரும் ௧ம் தேதி, மாலை, பெண்கள் விளக்கேந்தி ஊர்வலமாக மாரியம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவர்.