ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2021 04:03
தஞ்சாவூர், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்றதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், பூலோகவைகுண்டம், திருவிண்ணகர் என்றெல்லாம் போற்றப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் வேங்கடாசலபதி பெருமாள், ஒப்பிலியப்பன் என அழைக்கப்பட்டு பூமிதேவிநாச்சியாருடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், தொடக்கமாக கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அப்போது கொடி மரம் அருகே உற்சவ தாயாருடன் பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களி்ல் பெருமாள் தாயாரோடு வீதிவுலா நடக்கிறது. வரும் 5-ம் தேதி வெண்ணைய்த்தாழி அலங்காரமும், 6-ம் தேதி தேரோட்டமும், 9-ம் தேதி மூலவர் சன்னதியில் அன்னப்பெரும்படையலோடு விடையாற்றி விழா நிறைவு பெறுகிறது.