பதிவு செய்த நாள்
29
மார்
2021
04:03
திருவள்ளூர், : திருவூரல் உற்சவத்தை முன்னிட்டு, வீரராகவ பெருமாள், நாளை, புட்லுார் எழுந்தருள்கிறார்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பங்குனி மாதம், திருவூரல் உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தின் போது, உற்சவர் வீரராகவ பெருமாள், வழிநடை பயணமாக, புட்லுாருக்கு எழுந்தருளி, அங்குள்ள பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.இந்த ஆண்டிற்கான, திருவூரல் உற்சவத்தை முன்னிட்டு, நாளை, காலை, 5:00 மணியளவில், உற்சவர் வீரராகவ பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு, புட்லுார் எழுந்தருள்வார்.புட்லுார் மண்டபத்தில், மதியம், 1:00 மணிக்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின், இரவு, 9:30 மணிக்கு, திருவூரல் புறப்பாடு நடைபெறும்.அப்போது, வழிநெடுகிலும் உள்ள பக்தர்களுக்கு, பெருமாள் காட்சியளித்து, அருள்பாலிப்பார். மறுநாள், 31ம் தேதி, அதிகாலையில், வீரராகவர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு, திருவள்ளூர் வந்தடைவார்.