இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் மின் அலங்கார பவனியில் அம்மன் வலம் வந்தார்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, கரும்புத் தொட்டில், உருண்டு கொடுத்தல் போன்ற பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றினர்.நேற்று மாலை மின் அலங்கார தேரில் அம்மன் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாளை தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.