திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி திருவிழா மார்ச் 18ல் திருவிழா துவங்கியது. தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். நேற்று முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடைபெற்றது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்த பின், தீபாராதனைகள் நடந்தன. இரவு 16 கால் மண்டபம் முன், வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, பூ பல்லக்கில் தெய்வானை எழுந்தருளினர். அங்கு, மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து, வீதி உலா நிகழ்ச்சியில், சுவாமி அருள் பாலித்தார். இன்று காலை 6 மணிக்கு, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.