இந்தியா சுதந்திரம் அடைந்தால் நாட்டின் நிலை என்னாகும் என்பதை 25 ஆண்டுக்கு முன்பே ராஜாஜி சொன்னது.... நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அரசியல்வாதிகளின் அநியாயம், நிர்வாகத்துறையின் திறமையின்மையால் மக்களின் வாழ்க்கை நாசமாகி விடும்! ‘‘ வெள்ளைக்கார ஆட்சியே பரவாயில்லை! நீதி, நல்ல நிர்வாகம், அமைதியை பெற்றிருந்தோம் என மக்கள் கருதுவர். ‘‘அந்நியர் நம்மை ஆளவில்லை’’ என்பதைத் தவிர சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை. இருள் சூழ்ந்த இந்நிலையிலும் ஒரு நம்பிக்கை எனக்குத் தெரிகிறது. அனைவருக்கும் கல்வி வழங்கி, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையையும், ஆன்மிகத்தையும் சிறுவயதிலிருந்தே ஊட்ட வேண்டும். இதனால் ஒவ்வொருவரிடமும் நேர்மை, பக்தி, ஒழுக்கம் உருவாகும். 24–2–1922 வேலுார் சிறையில் இருந்த போது எழுதிய குறிப்பு.