இஸ்ரேல் ஜெருசலேம் நகரிலுள்ள பெத்லகேமில் மரியாளின் மகனாக இயேசு பிறந்தார். 33 வயது வரை வாழ்ந்த அவர், மனிதனின் இறப்புக்கு பின் நித்திய வாழ்வு உண்டு என்றும், அதற்காக மனந்திரும்புங்கள் என்றும் உபதேசித்தார். மதவாதிகள் செய்த அநீதியான செயல்களைச் சுட்டிக்காட்டியதற்காக ரோம அரசிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு மரணத்தை சந்தித்தார். பின்னர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். அந்த நாளே ஈஸ்டர் எனப்படுகிறது. ஈஸ்டருக்கு முந்தைய வாரம் புனித வாரம் எனப்படும். புனித வாரத்தின் வியாழன் ‘பெரிய வியாழன்’ எனவும், வெள்ளிக்கிழமை ‘புனித வெள்ளி’ என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வாரத்தின் இறுதி நாளான ஞாயிறன்று ஈஸ்டர். புனித வெள்ளியன்று நடக்கும் சிலுவைப்பாதை வழிபாட்டுக்குப் பின் மூன்று நாட்களுக்கு வழிபாடு நடக்காது. கல்லறையில் இயேசு புதையுண்டிருந்ததை நினைவுகூரும் விதமாக இது பின்பற்றப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை நினைவூட்டும் விதமாக ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.