பூஜையின் போது தீபாராதனை செய்யும் தட்டை, பக்தர்கள் தொட்டு வணங்குவர். இறைவனை ஜோதி வடிவாகக் கருதி வணங்குவதே இதன் நோக்கம். ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருப்பெருந்துறை ஆவுடையார்கோயிலில் தீபாராதனை தட்டை பக்தர்களிடம் காட்டுவதில்லை, தீபாராதனை செய்தபின்பு, தட்டை சன்னதிக்குள்ளேயே வைத்துவிடுகின்றனர். இங்கு சிவனே, ஜோதிரூபமாக இருப்பதால், தனியாக தீபாராதனை தட்டைத் தொட்டு வணங்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள். தினமும் நடக்கும் ஆறுகால பூஜையின்போதும், 108 மூலிகைகள் கலந்த தைலத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பு.