பல தலங்களில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள அம்மன், உடுமலைப்பேட்டை அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயிலில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறாள். சுயம்பு அம்மனுக்கு கீழே ஆவுடையாரும் உள்ளது. இங்கு அம்மனுக்கென்ற அடையாளங்கள் எதுவும் இல்லாவிடினும் கூட சக்திக்கு உண்டான அலங்காரம் மற்றும் பூஜை செய்யப்பட்டு வணங்கப்படுகிறது. சிவனும், சக்தியும் ஒன்றே என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வர வடிவில் விளக்குவது போல, அம்பாள் இந்த வடிவில் இருந்து சிவசக்தியின் தத்துவத்தை விளக்குகிறாள். அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வணங்கிட கண்நோய், அம்மை நோய் தீரும் என்பது நம்பிக்கை.